;
Athirady Tamil News

ஆனந்தவை இடமாற்றம் செய்யக்கோரி ஆனந்த மஞ்சள் கடவையில் ஆர்ப்பாட்டம்…!!

0

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்

நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே இன்று காலை 5 மணிமுதல் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீதியை சரியாக கடைப்பிடிக்காத பொறுப்பதிகாரியான தனது சகோதரர் ஆனந்த ராஜபக்ஷவை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கண்டி ஹட்டன் பிரதான வீதியின் நவலபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஆர்ப்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைதந்துள்ள போதிலும்,

குறித்த பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை தனது ஆர்ப்பாட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*