;
Athirady Tamil News

முல்லை- உடையார்கட்டில் குடும்ப பெண் மண்ணெண்னை ஊற்றி தற்கொலை முயற்சி…!!

0

முல்லைத்தீவு மாவட்டம் சங்கிலியன் வீதி,உடையார் கட்டு தெற்கு மூங்கிலாற்றுப்பகுதியில் வசிக்கும் குடும்பம் பெண் ஒருவா் கணவனுடன் ஏற்பட்ட வாக்கு வாதாத்தினை தொடர்ந்து மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் (08.03.2018) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது…….

சம்பவம் நடந்த இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கணவன் நித்திரையாக இருந்த சமயத்தில் மனைவி உடலுக்கு மண்எண்ணையினை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்போது கணவன் நித்திரை முழித்து பார்த்தபோது மனைவி உடல் தீயினால் எரிவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் தீயினை அணைக்க முற்பட்ட போது கணவனின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

அயலவர்களின் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 38 அகவையுடைய த.சயந்தினி என்ற குடும்ப பெண்ணே உடல் முழுவதும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இவரது கணவரான ஜ.யோகநாதன் என்பவர் கையில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + five =

*