;
Athirady Tamil News

கண்டி வன்முறை; அரசியல் குழு, 3 குழுக்கள் தொடர்பில் புலனாய்வு விசாரணை…!!

0

கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் ஏற்பட பின்புலனாக செயற்பட்ட அரசியல் கட்சியொன்று மற்றும் மூன்று குழுக்கள் தொடர்பிலான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்திருக்கிறது,

இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது,

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்ந்து மாவட்டத்திற்கு வெளியே இடம்பெற்ற சில கலவரங்களுக்குப் பின்னால் அரசியல் குழுவொன்று செயற்பட்டிருப்பது பற்றி புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இனவாத செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சிலரும் இந்த வன்முறைகளுக்குப் பின்னால் செயற்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 18 =

*