;
Athirady Tamil News

பொகவனை தோட்ட கொலை -கொலையாளியை கைது செய்யகோரி பகிஸ்கரிப்பு..!!

0

பொகவானை தோட்டத்தில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடா்புடைய மற்றொரு சந்தேக நபரை கைது செய்யுமாறு கோரியும் கொலை செய்த குடும்பத்தினை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோரியும் மக்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் நேற்று( 08.03.2018) இடம் பெற்ற கொலை சம்பவத்தில் மற்றுமொறு கந்தேக நபர் இருப்பதாகவும் , குறித்த சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் கொலை செய்த குடும்பத்தினரை தோட்டத்தை விட்டு வெளியேறும் மாறு கோரியும் இன்று(10.03.2018) சனி கிழமை காலை 08 மணி முதல் 10 வரை பொகவானை தோட்டமக்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் இன்று காலை முதல் 200 இற்குகும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் இந்த பணிபகிஸ்கரிப்பில் கலந்து கொண்டனர் பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் இருந்து குயினா தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் இந்த பணிபகிஸ்கரிப்பு இடம் பெற்றது.

இதன் போது பனிபகிஸ்கரிப்பு இடம்பெற்ற இடத்திற்கு பொகவனை தோட்ட முகாமையாளர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நேரில் சென்றனா்.

இதன்போது கொலை சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் இருப்பதாகவும் அந்த நபரை கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைத்தனா்.

இந்த நிலையில் குறித்த கொலையில் மற்றுமொறு சந்தேக நபர் தொடா்புபட்டிருப்பது தொடா்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தால் அந்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தெரிவித்தார்.

இதே வேளை கொலை செய்யபட்ட குடும்பத்தினரை தோட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமென தோட்ட முகாமையாளா் தெரிவித்த நிலையில் மக்கள் பணி பகிஸ்கரிப்பை கைவிட்டமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*