;
Athirady Tamil News

யானைத்தாக்குதலுக்கு உள்ளான காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையம்…!! (படங்கள்)

0

அம்பாறை கமநல கேந்திர மத்திய நிலையம் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் நிலையத்தின் வடபுற மதில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

கூடவே அங்கிருந்த பயிர்பச்சைகளும் துவம்சம்செய்யப்பட்டுள்ளன.இச்சம்பவம் நேற்று (09-03-2018) நள்ளிரவு 1மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முன்பொருதடவை இதேபோன்று கிழக்குப்புற மதில் யானையால் சேதமாக்கப்பட்டிருந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனா்.

இந்த யானையின் தாக்குதல் தொடா்பில் கமநலசேவை நிலையப்பொறுப்பதிகாரி எம்.சிதம்பரநாதன் கூறுகையில்…….

நள்ளிரவு ஒரு மணியளவில் தகவல் கிடைத்ததும் இங்கு வந்தேன். உடனே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தேன்.

வாகனமில்லை இப்போ வரமுடியாது என்றார்கள். யானை வந்து அனைத்தையும் முடித்துவிட்டுப்போனதன் பின்புதான் அவர்கள் வருவார்களா? அப்படியானால இவர்கள் எதற்கு? எமது நிலையத்தில் அறையும் சகல வசதிகளையும் செய்து தருகின்றேன்.

வாருங்கள் என்று முன்பு பலதடவைகள் அழைத்தற்கும் அவர்கள் வரவில்லை. இதுதான் நிலைமை என்றார்.

இது தொடா்பில் நிலை காவலாளி கே.ரவிக்குமார் கூறுகையில்……

ஒரு மணியளவில் நாய்கள் குரைக்கும் சத்தம்கேட்டு கண்விழித்தேன். எதிரே மதில்மேலால் யானை நின்று தும்பிக்கையை உள்ளே நீட்டியது. மறுகணம் 7 யானை வெடிகளை கொழுத்தினேன்.

அது அசையவில்லை. 3 சீனவெடிகளைக்கொழுத்தினேன். நகரவில்லை. பின்னர் செய்வதறியாது சாக்கை மண்ணெண்ணையில்நனைத்து தீப்பந்தம் போலாக்கி விசிக்க யானை நகர்ந்தது.

அதற்குள் மதிலையும் தள்ளி பயிர்களையும் சேதமாக்கியது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*