;
Athirady Tamil News

கண்டி கலவரம் போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்…!!

0

கண்டி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான நிலமைகள் இனிவரும் காலங்களிலும் ஏற்படாது தடுக்க வேண்டுமானால் உறுதியான செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளை அடக்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள படையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக அங்கு சென்றுள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இந்தத் தகவலை முன்வைத்திருக்கின்றார்.

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இராணுவம் உட்பட படையினரின் பொறுப்பிற்க சென்றுள்ளது.

இதற்கமைய ஐயாயிரத்திற்கும் அதிகமான படையினர் கண்டி மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு என்றுமில்லாத அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு அங்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று கண்டி நகரிலுள்ள அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துப் படுத்தும் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நாட்டில் கடந்த 30 வருடகாலமாக நிலவிய கொடூர யுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து சமூகங்களும் பேரழிவை சந்தித்த நிலையில் மீண்டும் அவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை தள்ளிவிட மேற்கொள்ளும் முயற்சிகள் வருத்தமளிப்பதாக ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

30 வருட கொடிய யுத்தத்தின் போது இராணுவத் தரப்பில் 28 ஆயிரம் பேர் பலியானதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 20 ஆயிரம் பேர் நிரந்தரமாக அவையவங்களை இழந்திருப்பதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இவ்வாறான ஒரு பின்னணியில் மீண்டும் ஒரு குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்ல முயல்வதை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது என்றும் தெரிவித்தார்.

தான் ஒரு சிங்கள பௌத்த மதத்தவன் என்று குறிப்பிட்ட அவர் கண்டி போன்ற நாட்டின் சிறந்த வரலாற்று பின்னணியைக் கொண்ட ஒரு இடத்தில் எவ்வாறு இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்பது பெரும் கள்வியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும்துர்ப்பாக்கியமான நிகழ்வுகளாக கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களைக் கருதி அவற்றை முடிவுக்கு கொண்டுவந்து சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*