;
Athirady Tamil News

வவுனியாவில் துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலியாகியுள்ளார்…!! (படங்கள்)

0

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் சட்டவிரோதமாக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்ததில் இன்று சனிக்கிழமை இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக உள்ளூரில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கியினை மதகினுள் மறைத்து வைத்த நிலையில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியை வேட்டைக்கு செல்வதற்காக குறித்த இளைஞர் எடுத்த போதே துப்பாக்கி தன்னிச்சையாக வெடித்தததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இராசபுரம் ஊஞ்சல் கட்டியை சேர்ந்த இருபத்து மூன்று வயதுடைய சிதம்பரம் விஜயன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − one =

*