;
Athirady Tamil News

வவுனியாவில் காணமற்போன குழந்தை அநுராதபுரத்தில் மீட்பு…!!

0

வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் காணாமல் போன குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் தாயாரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலாபோகஸ்வெவ்வை சேர்ந்த எம். எம். கல்யாணி மானகே வயது 37 என்ற பெண் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.

இந் நிலையில் இரண்டு நாட்களாக தாயின் பராமரிப்பின் வைத்தியசாலையில் இருந்த குழந்தை நேற்றைய தினம் திடீர் என காணாமல் போய்விட்டதாக தாயாரால் வைத்தியசாலை தாதியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டு குழந்தையை தேடியபோதிலும், குழந்தை இன்மையால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இன்றைய தினம் குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களுக்கும், பொலிஸாருக்கும் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, தந்தையாரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவந்ததுடன், அனுராதபுரத்திற்கு அழைத்து சென்று குழந்தையை மீட்டிருந்தனர்.

இந் நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம் தாயாரே குழந்தையை விற்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, தாயாரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*