;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் மேலும் ஒரு ராணுவ வீரர் தற்கொலை..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோன்வார் மாவட்டத்தின் ராம் முன்ஷி பாக் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர் புர்கா சுக்தேவ் பணியில் இருந்தார். இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதைக்கேட்டு வந்த ராணுவ வீரர்கள் சுக்தேவ் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு சுக்தேவ் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

சுக்தேவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுக்தேவ் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் மட்டும் மூன்று வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். பிரேந்தர் சின்ஹா மற்றும் நாயக் ஷங்கர் சிங் என்ற இரு ராணுவ வீரர்களைத் தொடர்ந்து, இன்று சுக்தேவ் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*