;
Athirady Tamil News

கேரள விமான படை அதிகாரி மனைவியுடன் படுகொலை..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்தவர் ஜி.கே. நாயர் (வயது 75). ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி. இவரது மனைவி கோமதி (62). ஓய்வு பெற்ற நர்சு. இவர்களது 3 பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து விட்டு இருவரும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்தனர்.

நேற்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படவில்லை. வேலைக்கார பெண் வீட்டு மாடியில் பார்த்தபோது தம்பதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

இது குறித்து அவதிப்பூரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவதிப்பூரி போலீசார் கூறும்போது, கொலை நடந்த வீட்டில் நகை, பணம் எதுவும் திருட்டுபோகவில்லை. முன்விரோதத்தால் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று கூறினார்.

இந்த தகவல் கிடைத்ததும் மன்னார்காட்டில் உள்ள கோமதியின் தம்பிகள் பிரசன்னா மற்றும் பாலகிருஷ்ணன் கூறும்போது, கடந்த 30 வருடங்களாக போபாலில் வசித்து வருகிறார்கள். 2 வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவார்கள்.

இந்நிலையில் அவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 14 =

*