;
Athirady Tamil News

கர்நாடக மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு பெண் தற்கொலை..!!

0

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா(32). மூன்றாண்டுகளுக்கு முன்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர் மைசூரில் தனியாக வாழ்ந்து வந்தார்.

மடிக்கேரி அருகேயுள்ள சோம்வார்பேட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சவுமியா வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று சவுமியா தங்கி இருந்த அறையில் திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் ஓடிவந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 4 =

*