;
Athirady Tamil News

கோடை வெயில் காரணமாக காலை 11 மணிக்குள் பள்ளிகளை மூட வேண்டும்- ஒடிசா அரசு உத்தரவு..!!

0

கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாநில கல்வித்துறை சார்பாக அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘பள்ளிகளின் வேலை நேரம் காலை 6:30 மணியளவில் தொடங்கி 10:30 மணிக்கு முடிவடையும். மதிய உணவானது காலை 10 மணிக்கு வழங்கப்பட வேண்டும். 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது. பள்ளி நேரம் குறைக்கப்பட்டதால் தேர்விற்கான அனைத்து பயிற்சிகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் பள்ளி நிர்வாகம் முடிக்க வேண்டும்.

மேலும், வெயில் காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் போது குடை மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வர மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நேர மாற்றம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*