;
Athirady Tamil News

தனது நண்பருக்கு மகளை விருந்தாக்கிய கொடூர தாய்: இளம்பெண்ணின் கண்ணீர் கதை..!!

0

அவுஸ்திரேலியாவில் பெற்ற தாயாரின் துணையுடன் வழிபோக்கர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பேசிய பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அப்போது வெறும் 16 வயதேயான Peta Butler என்ற இளம்பெண்ணை அவரது தாயார் Therese Butler ஏமாற்றி குயின்ஸ்லாந்தில் உள்ள மிகவும் மோசமான மொட்டேல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்

பின்னர் தனது இணைய நண்பர் ஒருவருடன் தமது சொந்த மகளை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார்.

மொட்டேல் அறையில் தனியாக இருந்த பீட்டாவை திடீரென்று ஆண் ஒருவர் தாக்கி அவருடன் பலாத்காரமாக உறவு கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், பேசிய பீட்டா, அந்த சம்பவம் சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது. இப்போதும் எனக்கு அந்த நபரின் அருவருப்பான மணம் நினைவில் இருக்கிறது.

தன்னை விட 3 மடங்கு வயதில் மூத்தவரான அந்த நபர் தம்மை கொடூரமாக கற்பழித்தபோது, அந்த அறையின் வெளியே தமது தாயார் புகைபிடித்தப்படி காத்திருந்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

ஒரு கணம் எனது மனது ஆசித்தது, அறைக்கு வெளியே சென்றுள்ள தாயார் வந்து இந்த மிருகத்திடம் இருந்து தம்மை காப்பார் என. ஆனால் அது நடைபெறவே இல்லை, அவருக்கு தெரியும் மொட்டேல் அறைக்குள் என்ன நடக்கிறது என்று, என கண்ணீர் வடித்தார் Peta Butler.

இந்த துயர நிகழ்வுக்கு பின்னர், அந்த கொடிய மிருகத்துடன், தமது தாயாரும் தாமும் அதே அறையில் அன்றிரவு தங்கியிருந்தோம். இந்த சம்பவம் தொடர்பில் தனது தாயாருக்கு எதிராக புகார் தெரிவிக்க தமக்கு 10 ஆண்டுகள் ஆனது என குறிப்பிடும் Peta Butler, 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான்பொலிசாருக்கு தனக்கு நேர்ந்த துயரம் தொடர்பில் புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ள தெரேசாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள தெரேசாவின் இணைய நண்பரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உடனடியாகஉதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + twenty =

*