;
Athirady Tamil News

வவுனியாவில் குழந்தை காணாமல் போன விவகாரத்தில் திடீர் திருப்பம்; யுவதி கைது…!! (படங்கள்)

0

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களான குழந்தை காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தை சேர்ந்த யுவதியொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கலாபோகஸ்வௌவை சேர்ந்த எம். எம். கல்யாணி மானகே வயது 37 என்ற பெண் அனுமதிக்கப்பட்டு குழந்தையை பெற்றுள்ளார்.

இந் நிலையில் இரண்டு நாட்களாக தாயின் பராமரிப்பின் வைத்தியசாலையில் இருந்த குழந்தை, நேற்றைய தினம் தாய் மலசலகூடம் சென்று திரும்பியபோது, திடீர் என காணாமல் போயிருந்தது. இதனையடுத்து குழந்தையின் தாயாரால் வைத்தியசாலை தாதியர்களிடம் தெரிவிக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணிகள் இடம்பெற்றிருந்தது.

இதனால் வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டு குழந்தையை தேடியபோதிலும், குழந்தை இன்மையால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந் நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையொன்றினை தாயோருவர் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ள நிலையில், அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்த குழந்தையை கொண்ட வந்தவர் மேலும் சந்தேகம் கொண்டு தாயாரை பரிசோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குழந்தையை கொண்டு வந்த தாயார், குழந்தை பெற்றமைக்கான சான்றுகள் இன்மையாலும், வைத்தியசாலையில் குழந்தையொன்று காணாமல் போனமை தொடர்பாக செய்தி கிடைக்கப்பெற்றமையினாலும், அனுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா பொலிஸாருக்கும், வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தந்தையாரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததுடன், அனுராதபுரத்திற்கு அழைத்து சென்றிருந்துடன், ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம் தாயாரே குழந்தையை விற்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, தாயாரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை குழந்தை மரபனு பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டிய தேவையுள்ளமையினால், அனுராதபுரம் வைத்தியசாலையின் பராமரிப்பில் உள்ள நிலையில், குழந்தையை கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்த 21 வயதுடைய யுவதியை கைது செய்த வவுனியா பொலிஸார், அவரை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் குறித்த யுவதி திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், குடும்பத்தினருடன் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் கர்ப்பமடைந்துள்ள போல் அண்மைக்காலமாக பாசாங்கு செய்து வந்த நிலையில், நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதியில் இருந்து குழந்தையொன்றை எடுத்துச்செல்லும் நோக்குடன் வந்துள்ளார்.

இவர் விடுத்திக்குள் நுழைந்தபோது, குறித்த குழந்தையே தாய் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே அக் குழந்தையை எடுத்துச்செல்வது இலகுவாக இருந்தமையினால், குழந்தையை எடுத்து அனுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் குழந்தைக்கு உடல்நலம் சீரின்மையாக இருப்பதை அவதானித்த குறித்த யுவதி, அனுராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குழந்தையின் தாயாரை பொலிஸார் விடுவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திக்கு….

வவுனியாவில் காணமற்போன குழந்தை அநுராதபுரத்தில் மீட்பு…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twenty =

*