;
Athirady Tamil News

கண்டி மாவட்ட மக்களுக்கான நற்செய்தி – ஊரடங்கு உத்தரவு அமுலாக்கபடாது…!!

0

கண்டி நிா்வாக மாவட்டத்தில் நிலவும் இயல்பான நிலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலாக்கபடாது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளாா்.

கடந்த நாட்களில் குறித்த பகுதியில் நிலவிய குழப்பநிலை காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

கண்டி தெல்தெனிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று தாக்கி படுகொலை செய்ததை அடுத்து கலவரங்களும் வன்முறைகளும் ஏற்பட்டன.

இதனிடையே முஸ்லிம் பள்ளிவாசல்கள் பலவற்றின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளும் உடைக்கப்பட்டு தீ மூட்டப்பட்டன.இந்த சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பலியாகியிருந்தார்.

இதேவேளை, கண்டி பூஜாப்பிட்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்ந்து அக்குறனை, கட்டுகஸ்தோட்டை, மாத்தளை உள்ளிட்ட பல இடங்களுக்கும் பரவின.

இதனையடுத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு 6 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக நாடு முழுவதிலும் அவசர காலச் சட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அங்கு தற்போது சாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கபடாது எனவும் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 2 =

*