;
Athirady Tamil News

இலங்கையுடன் இணைய விரும்பும் பாகிஸ்தான்…!!

0

தெற்காசியவுக்கான பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புதுப்பிக்க இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷஹிட் கஹான் அப்பாஷி நேற்று (வெள்ளிக்கிழமை) இதனைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரான எல்.கே.ஜெயநாத் சீ பெரேரா அவரைச் சந்தித்தபோதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தளமாக விளங்கும் சார்க் மாநாட்டைப் புதுப்பிக்க இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அவசர நிலைமைகளின் போது உர ஏற்றுமதியினை விரைவுபடுத்தியமைக்காக உயர்ஸ்தானிகர், பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + six =

*