;
Athirady Tamil News

விபத்தில் படுகாயமடைந்தவரை வேடிக்கை பார்த்த மக்கள்:சிகிச்சை இன்றி பரிதாபமாக பலி…!!

0

விபத்தில் படுகாயமடைந்து மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வராததால் அதிகளவு இரத்தம் வெளியேறி குறித்த நபர் உயிரிழந்த பரிதாப சம்பவம் காரைநகர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தரான 55 வயதுடைய மாணிக்கம் என்பவர் நேற்று பிற்பகல் தனது உந்துருளில் தலைக்கவசம் அணியாமல் காரைநகர் நீதிப்பந்தல் அம்மன் கோவில் வீதியால் அதிவேகமாக வந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மதில் ஒன்றுடன் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்தில் மயக்கமடைந்துள்ளார்.

இவரைச்சுற்றி ஐந்நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கை பார்துக்கொண்டு நின்றுள்ளனர். ஆனால் ஒருவரும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லலை

சம்பவம் அறிந்து அந்த இடத்துக்கு வந்த பொலிசார் வீதியில் சென்ற வாகனங்களை உதவிக்கு அழைத்த போதும் சிலர் ஓட்டமெடுத்துள்ளர்.

பின்னர் பொலிஸார் தாமாகவே அந்த நபரை வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்களின் மனிதாபிமானமற்ற இந்த செயற்பாட்டு தொடர்பில் வைத்தியர்கள் பொலிஸார் கவலை வெளியிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*