;
Athirady Tamil News

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத்தடை நீக்கப்படவில்லை…!!

0

பேஸ்புக், உள்ளிட்ட சமூக தொடர்பாடல் வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத்தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இந்த தடையை நீக்குவதற்கான உத்தரவு இன்னும் உரிய அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை என்று, இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தடை விதிக்கப்படுவதற்கு பேணப்பட்ட ஒழுங்குவிதிகள், தடையை நீக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகள் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த தடை ஏற்படுத்தப்படிருந்தது.

இந்த தடையின் ஊடாக வன்முறைகள் பெரிதும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படிருப்பதாக, ராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வைத்து கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 8 =

*