;
Athirady Tamil News

புத்தளத்தில் உணவகம் தீக்கிரை – பேருவளையில் பெற்றோல் குண்டு தாக்குதல்..!!

0

புத்தளம் – ஆணைமடுவ பகுதியில் உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த புத்தளம் பொலிஸார் சேத விபரங்கள் குறித்து முழுமைான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரைணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பேருவளை தர்கா வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − thirteen =

*