;
Athirady Tamil News

இலங்கை அகதிப் பெண்ணைக் கர்ப்பிணியாக்கிய இளைஞர்…!!

0

தமிழகத்திலுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய இலங்கை அகதிக்கு இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்தின் அடிப்படையில் அந்த நபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டையும் 26,000 ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பு வகிக்கும் ஏ.கயல்விழி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பின் தொடர்ச்சியாக, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய குற்றத்துக்காக ஒரு வருட சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை யை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மொத்த அபராதத் தொகையான 31,000 ரூபாயில் 30,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், 1,000 ரூபாயை வழக்குச் செலவுக்காகவும் கொடுத்து விட வேண்டும் என்றும், சிறைத் தண்டனையான 8 ஆண்டுகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் இர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 24 வயதுடைய பிரசாத் என்ற இளைஞருக்கும் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த 24 வயதுடைய குறித்த பெண்ணுக்குமே குறித்த காதல் தொடஎபு இருந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பிரசாத், அவரைக் கர்ப்பிணியாக்கியுள்ளார். பின்னர் கர்ப்பிணியான அந்தப் பெண்ணை பிரசாத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையின் போது குறித்த பெண்ணுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்தது என்றும் அக்குழந்தைக்கு மரபணு சோதனை செய்யப்பட்டதில் பிரசாத்துக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளை என்பதும் உறுதியாகியுள்ளது. இதன்பின்னரே பிரசாத்துக்கு நீதிமன்றம் மேற்படி தண்டனையை வழங்கியுளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + nine =

*