;
Athirady Tamil News

இராணுவம் கடும் எச்சரிக்கை; முகநூல் பாவனையாளர்களுக்கு ஆப்பு…!!

0

இலங்கையின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் நோக்குடன் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்பினரின் அற்ப நோக்கங்களுக்காக நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலிகொடுக்க அரசாங்கம் தயாரில்லை என்று குறிப்பிட்ட தளபதி, இவ்வாறான அற்ப நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக உயர்ந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த இராணுவம் தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்டர் அவர்,

”அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவத்துடன் பல்வேறு பெயர்களில் தோன்றிய இனவாத இயக்கங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் செயற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேவையான உயர்ந்த பட்ச அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தவுள்ளோம்” என்றார்.

இதேவேளை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அவசரகால நிலைமைக்கு உட்பட்டு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*