காத்தான்குடியில் பிரபல வர்த்தகரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு..!!

காத்தான்குடியில் பிரபல வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி நகர் – மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) எனும் பாதணித் தொழிற்சாலைகளின் உரிமையாளரே சனிக்கிழமை நேற்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், வழமைபோன்று மஞ்சந்தொடுவாயிலுள்ள தனது தொழிற்சாலையிலிந்து வெளியேறிய போது பதிவான கண்காணிப்புக் கமராவின் காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தற்போதைய சூழ்நிலையிலே காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.