;
Athirady Tamil News

80 இலட்சம் ரூபாய் பணம் மாயம்! – யாழ். பொலிஸார் விசாரணை…!!

0

அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள வங்கிக்கு கொண்டுசெல்லப்பட்ட 80 இலட்சம் ரூபாய் பணம் மிகவும் நூதனமாக முறையில் திருடப்பட்டுள்ளது.

பணத்தைக் கொண்டுசென்ற வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) குறித்த பணத்துடன் வங்கி ஊழியர்கள் மூவரும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் வாகனத்தில் பயணித்துள்ளனர்.

பயணத்தின்போது கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் சென்றிருந்த போது, பணம் திருடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலுள்ள வங்கி ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியில் வைப்பிலிடுவதற்காகவே இப்பணம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய முகாமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்த யாழ்ப்பாணம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + nine =

*