;
Athirady Tamil News

திருட்டில் ஈடுபட்ட சிறுவர் பராமரிப்பு இல்லத்துச் சிறுவர்கள்…!!

0

ஏறாவூ – சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக 4 சிறுவர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கிடைப்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சிறுவர்களினால் திருடப்பட்ட 4800 ரூபாய், 35 கையடக்கத் தொலைபேசிகள், 2 டப்கள், கமெரா, கையடக்கத் தொலைபேசிகளுக்கான பற்றரி சார்ஜர்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள் நிரப்பு அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்திவெளிலுள்ள கையடக்கத் தொலைபேசியின் விற்பனை நிலையமொன்றில் கூரைகள் அகற்றப்பட்டு இடம்பெற்ற திருட்டு இடம்பெற்று வந்துள்ளது.

இது தொடர்பாக அதன் உரிமையாளர் நவரெட்ணம் விஜந்தன் என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கண்காணிப்புக் கமெராவில் பதிவான காணொளிகளை வைத்து விசாரணை நடத்திய பொழுது குறித்த சிறுவர்கள், சந்திவெளியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் விசாரிக்கப்பட்ட பொழுது பராமரிப்பு நிலையத்திலும் வேறு இடங்களிலுமாக வைக்கப்பட்டுள்ள திருடப்பட்ட பொருட்களைக் கைப்பற்றினர்.

இவ்விசாரணை, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலிலும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஸன் பெர்னான்டோவின் வழிகாட்டலிலும் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − five =

*