;
Athirady Tamil News

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்திய முகநூல் கணக்குகளுக்கு இறுதிச் சடங்கு..!!

0

இலங்கையில் தீவிரமாக இனவாதக் கருத்துக்களை தெரிவித்துவந்த பலரது பேஸ்புக் கள்ணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த கண்டி சம்பவங்களின் பின்னணியில் முகநூல் மூலமான இனவாதக் கருத்துப் பரவுகையும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் 72 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்களை அவசரமாக முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை அடுத்த சில நிமிடங்களில் உடனடியாக அமுல்படுத்தப்பட்டது.

எனினும் 72 மணித்தியாலங்களை கடந்தும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூகவலைத்தளங்கள் இன்றுவரை முடக்கலிலிருந்து விடுக்கப்படவில்லை. தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இனவாதத்தை பரப்பியதாக கூறப்படும் Mahson Balakaya மற்றும் Lella Hutan போன்ற பல பேஸ்புக் பக்கங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போலி செய்திகள் மற்றும் இனவாத கருத்துக்களை பரப்பிய 150 பேஸ்புக் கணக்குகள், வட்ஸ்அப், வைபர் கணக்குகள் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. இதன்போது வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − three =

*