;
Athirady Tamil News

நிலாவெளியில் தாமரை மொட்டு பறித்த ஐவர் பலி..!!

0

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளத்தில் படகு கவிழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று ஞயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 03 ஆண்கள், 02 பெண்கள் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

பிரதேச கோவிலொன்று பூசை வழிப்பாட்டிற்காக வந்துள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஐவரும் தாமரை மொட்டுக்களை பறிக்க முற்பட்ட போதே அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + five =

*