;
Athirady Tamil News

சிவனொளிபாதமலையில் தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் அதிரடி கைது…!!

0

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள், அட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன், 10.03.2018 அன்று அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த 02 பேர் உட்பட, மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில், 10.03.2018 அன்று காலை 11.00 மணிமுதல் இரவு எட்டு மணிவரை வாகனங்களை சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் 11.03.2018 அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக, அட்டன் பொலிஸ் நிலையத்தின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன், விசேட திட்டம் ஒன்றினை ஆரம்பித்து செயப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் போது பல தடவைகள் வாகனங்களை சோதனை செய்த போது, கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 10 =

*