;
Athirady Tamil News

யாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…!! (படங்கள்) இணைப்பு

0

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதம் ஒவ்வாமையினால் 109 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

ஊர்காவற்துறை நெருஞ்சி முனை பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை தவக்கால சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பூஜை வழிபாடுகளின் பின்னர் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை உட்கொண்ட 109 பேர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பெற்ற பெரும்பாலனவர்கள் சுகமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*