;
Athirady Tamil News

ஈரானிற்கு நுழைய முயற்சித்த இலங்கையர்கள் தடுத்து வைப்பு…!!

0

அஸர்பர்ஜான் நாட்டிலிருந்து ஈரானிற்குள் சட்டவிரோதமான நுழைய முயற்சித்த நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழைமை இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உஸ்பெக்கிஸ்தான் பிரஜை ஒருவரும் கடந்த வெள்ளி குறித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் மத்திய ஆசியாவிலிருந்து ஈரானிற்கு நுழைய முயற்சித்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 1 =

*