;
Athirady Tamil News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷூ வீச்சு..!!

0

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆளும் முஸ்லிம் லீக் கட்சித்தலைவராக உள்ள நவாஸ் ஷெரீப், லாகூர் நகரின் காரி ஷாகு பகுதியில் உள்ள ஜாமியா நெமியா மதராசாவில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

உரையாற்ற எழுந்து மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. மைக்குகள் வைக்கப்பட்டிருந்த மேஜை மீது விழுந்த ஷூ, நவாஸ் ஷெரீப்பின் காதை தாக்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஷூ வீசிய நபர் முன்னேறி வந்து நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஆவேச குரல்களை எழுப்பினார். அவரை கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்தனர். முன்னாள் மதராசா மாணவரான அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷூ வீசப்பட்டாலும் சிறிது நேரம் பேசிவிட்டு நவாஸ் ஷெரீப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எனினும், அவர் தனது உரையில் ஷூ வீச்சு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி காஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*