;
Athirady Tamil News

உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகம் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம் – நீதா அம்பானி..!!

0

இந்தியாவில் ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக நிறுவனர்-தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தின் கீழ் 14 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-தலைவர் நீதா அம்பானி புதிய உலக தரம் வாய்ந்த பல்கலைகழகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டார்.

இதுகுறித்து நீதா அம்பானி கூறியதாவது:-

விளையாட்டும், கல்வியும் நாளைய இந்தியாவின் தூண்களாகும். உலகின் சிறந்த மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு கூட குறிப்பிட்ட ஆயுட்காலம் உள்ளது. ஆனால் கல்வி நிலையங்களுக்கு அப்படி ஏதும் கிடையாது. அதில் பல தலைமுறைகளாக பயில்பவர்கள் உயிர் வாழ்கிறவரை அதற்கு அழிவு கிடையாது. அதற்காக தான் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகத்தை தொடங்க ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வளர்க்கும். கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பல்கலைகழகமாக அது இருக்கும். இந்த பல்கலைகழகம் உலகின் முன்னணி பல்கலைகழகங்களுடன் இணைந்து எதிர்கால சங்கதியினருக்கு கல்வி மற்றும் திறமையோடு உலகை எதிர்கொள்ள கற்றுத்தரும். பல்கலைகழகத்தில் இருந்து எதிர்கால தலைவர்கள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஒலிம்பிக் வீரர்கள் முதலானோர் உருவாவார்கள்.

இவ்வாறு நீதா அம்பானி பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 6 =

*