;
Athirady Tamil News

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!!

0

அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் ஒரு 6 வயது சிறுமி வீட்டின் அருகே தனியாக விளையாடி கொண்டு இருந்துள்ளார். இப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு 27 வயது வாலிபர் அந்த சிறுமியை ஏமாற்றி அருகில் உள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு யாரும் இல்லாதை பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அங்கு நடந்த விசயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டிவிட்டு வீட்டின் அருகே விட்டு சென்றுள்ளான்.

வெகுநேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வராததையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்று தேடியுள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக இதுகுறித்து விந்தியாசல் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார், அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரையும் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 10 =

*