;
Athirady Tamil News

வளர்ந்துவரும் நாடுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க 1.4 பில்லியன் டாலர் நிதி – மோடி அறிவிப்பு..!!

0

டெல்லி அருகேயுள்ள குர்கான் நகரில் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமை செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியை மின் தேவைகளுக்கு பயன்படுத்தும் நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று இந்த அமைப்பை முறைப்படி அறிவிக்கும் முதல் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானும் இணைந்து டெல்லியில் தொடங்கி வைத்தனர். இந்த உச்சி மாநாட்டில் 23 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், 10 நாடுகளை சேர்ந்த மந்திரிசபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதற்கான பத்து அம்ச செயல்திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்த தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, வளர்ந்துவரும் 15 நாடுகளில் 27 சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக இந்தியா சார்பில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியாக அளிக்கப்படும் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*