;
Athirady Tamil News

நிறுத்தி வைக்கப்பட்ட வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு மீண்டும் தொடக்கம்..!!

0

டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓம் பிரகாஷ் ரவத் பெங்களூரில் நடந்த வருடாந்திர தேர்தல் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.

தற்போது ஆதார் பயன்பாடும் அதன் மதிப்பும் அதிகரித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி நடத்தி வந்தது.

மொத்தம் உள்ள 87.50 கோடி வாக்காளர்களில் 32 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டையும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆதார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால் 2015-ம் ஆண்டு இந்தப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான கதவு திறக்கப்பட்டுவிட்டது. தேர்தல் கமி‌ஷன் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம். கோர்ட்டு அனுமதி பெற்று மீதம் உள்ள 55 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணியை தொடங்குவோம்.

நாடு முழுவதும் 87 கோடி வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே 32 கோடி வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டு விட்ட நிலையில் மீதம் உள்ள 55 கோடி அடையாள அட்டையும் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 5 =

*