;
Athirady Tamil News

கண்டி கலவரம்: பொய் பரப்புரைகளை செய்த பேஸ்புக் கணக்குகள் கண்டுபிடிப்பு…!!

0

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள்
தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 186 பேஸ்புக்
கணக்குகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தகவல் தொழிநுட்பவியலாளர்கள்
சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில்
பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பி வந்துள்ளதாக அந்த சங்கம்
குறிப்பிட்டுள்ளது.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய குற்றப்புலனாய்வுத்
திணைக்களம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள்
எதிர்வரும் ஓரிரு நாட்களில் வழமைக்குத் திரும்பும் என அந்த சங்கம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*