;
Athirady Tamil News

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவாக குற்றச்சாட்டு…!!

0

வவுனியா மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் பழைய வங்கிகளை ஒத்த நடைமுறைமையே பின்பற்றப்பட்டு வருகின்ற காரணத்தால் அங்கு பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதுடன் முறைகேடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்படவில்லை இதன்காரணமாகவே அங்கு முறைகேடுகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிப்பதுடன் மோசடிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மோசடியில் ஈடுபடும் சமூர்த்தி உத்தியோகத்ததவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை.

நிதி மோசடிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகங்களுக்குள்ளே தண்டனை மாற்றங்கள் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் நிதிமோசடிகளை பாரியளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி மோசடிகள், முறைகேடுகள் இடம்பெறாமலிருக்க சமுர்த்தி வங்கிகளை கணனிமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஒரே வலையமைப்பில் அனைத்து வங்கிச் செயற்பாடுகளும் தற்போது தொழிநுட்பத்தில் மேலோங்கி செயற்பட்டு வரும் வேளைகளில் அரசாங்கத்தின் திணைக்களமான சமுர்த்தித்திணைக்களத்தின் வங்கிகள் மட்டும் பழைய முறைமையில் இயங்கி வருகின்றது.

எனவே நிகழ்கால முறைமையில் சமுர்த்தி வங்கிகள் கணனிமயப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன் மூலமே உத்தியோகத்தர்களினால் இடம்பெறும் முறைகேடுகள் நிதிமோசடிகளை தடுத்து நிறுத்த முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*