;
Athirady Tamil News

கண்டி சம்பவம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – பிரதமர்..!!

0

கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கெதிராக
விரைவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு
பணிப்புரை விடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டியவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பிரச்சனைகளை பேச்சுவார்தை மூலம் சமரசம் செய்துகொள்ள வேண்டும்
என்பதையும் இதன்போது வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + eleven =

*