;
Athirady Tamil News

ஆனமடு நகரில் சேதமாக்கப்பட்ட முஸ்லிம் உணவகம் புனரமைப்பு..!! (படங்கள்)

0

புத்தளம், ஆனமடு நகரில் தீவைக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட முஸ்லிம் உணவகம்,
அந்தப் பகுதியின் விகாராதிபதி தலைமையில் புனரமைப்பு பணிகள் இன்று
(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் இணைந்து செயற்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை ஆனமடுவில் உள்ள முஸ்லிம் உணவகமொன்றின் மீது
இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருவதாகவும், அந்தப் பகுதியில் நேற்றிரவு முதல் கடமையிலிருந்த
இரு பொலிஸாரிடம் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனமடு
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eight =

*