;
Athirady Tamil News

இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் பிரதிநிதிகள், பிரித்தானிய மக்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பு..!!

0

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையின் பெரும்பான்மையின மக்களது பிரதிநிதிகள் குழு ஒன்று, அந்த நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டோபியாஸ் எல்வுட்டை சந்தித்துள்ளனர்.

3 பிரதிநிதிகள் அடங்கிய இந்த குழு, பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை ஒன்றை அமைச்சரிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியே பிரியங்க பெர்ணாண்டோ, சைகை மூலம் கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் மீள இலங்கைக்கு அழைக்கப்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகளது ஆதரவாளர்களின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள், பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*