;
Athirady Tamil News

நிர்பயா நிதி செலவு விவகாரம்: பெண்கள் நலத்துறை அமைச்சகத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்..!!!

0

பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் ஒதுக்கப்படும் இந்த நிதியின் மூலம், பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு பணிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செய்து வருகிறது.

இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியின் செலவினம் குறித்து மனித வள முன்னேற்றத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்தியது. அப்போது நிர்பயா நிதி மிகவும் குறைந்த அளவிலேயே செலவிடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக 2017-18-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு இருந்த ரூ.90 கோடி நிர்பயா நிதியில், கடந்த மாதம் 3-ந் தேதி வரை வெறும் ரூ.18.91 கோடியே செலவழிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பாராளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. நாட்டில் ஒருபுறம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவாக செலவழிக்கப்படுவது பெரும் முரணாக இருப்பதாக நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*