;
Athirady Tamil News

மணிப்பூரில் காரில் கடத்திய ரூ.4¾ கோடி தங்கம் பறிமுதல்..!!

0

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் நாட்டின் எல்லையையொட்டி உள்ள தெங்நவ்பால் மாவட்டத்தில், குதெங்தாபி என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.

இங்கு நேற்று அதிகாலை அசாம் ஆயுத படையை சேர்ந்த போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தெங்நவ்பால் மாவட்டத்தின் மோரா நகரில் இருந்து இம்பால் நோக்கி சென்றுகொண்டிருந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரின் அடிப்பகுதியில் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து, கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ரூ.4 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 97 தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + two =

*