;
Athirady Tamil News

ஐக்கிய நாடுகளின் அரசியல்விவகார பிரதானி எதிர்பார்த்துள்ள விடயம்…!!

0

காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் விரைவாக ஆரம்பிக்கும் என்று எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல்விவகார பிரதானி ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் விஜயமாக இலங்கை வந்த அவர் நேற்றுடன் தமது விஜயத்தை நிறைவு செய்தார்.

அவர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், அரசியல் கட்சிகள், சிவில் சமூக மற்றும் பொதுக்குழுக்களின் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தார்.

இந்தநிலையில், காணாமல் போனோர் அலுவலகத்துக்கு புதிதாக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை, நம்பிக்கையூட்டும் விடயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் இந்த குழு, காணாமல் போனோர்களின் உறவினர்களது நீண்டகால கேள்விகளுக்கு பதில் வழங்கும் என்று எதிர்பார்ப்பார்த்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் அமுலாக்கப்படாதிருக்கின்றமைக்கு அவர் தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் உறுதிமொழிகள் உரிய வகையில் நேரசூசியுடன் அமுலாக்கப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுக்கும் ஜெப்ரி பெல்ட்மன் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 8 =

*