;
Athirady Tamil News

நுவரெலியா சென்ற வாகனம் திடீர் விபத்து!! மூவர் படுகாயம்…!!

0

தலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 10 மணியளவில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சானை ஏற்றிச்சென்ற டிப்பர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 3 =

*