;
Athirady Tamil News

வடமாகாணம் – 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள்…!!

0

வடமாகாணத்தில் இவ்வருடம் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்தார்.

இவ்மாதிரி வீடமைப்பு கிராம நிர்மாண வேலைகளுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட 48 வீடமைப்பு கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக திரு.பலன்சூரிய வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் புதிய வீடமைப்பு கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 5 =

*