;
Athirady Tamil News

விமானக் கழிப்பறையிலிருந்து வர மறுத்த சடலம்; விழி பிதுங்கிய ஊழியர்கள்…!!

0

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையை நோக்கி பயணித்த நபர் ஒருவர் நடுவானில் திடீர் மரணத்தினைச் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான யூ.ஏ.ஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இவர், இலங்கையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகைதந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு திடீர் வைத்திய அதிகாரியினால் இந்த சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பயணி மாரடைப்பு ஏற்பட்டு விமானக் கழிப்பறையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சற்று பெரியதாக இருந்தமையினால் கழிப்பறையில் இருந்து வெளியே எடுப்பதற்கு ஐந்தரை மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் உடலை எடுக்க கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, மரண விசாரணை மற்றும் சாட்சிகளுக்கமைய அவர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை ஒன்றின் ஆசிரியையாக விளங்கும் தனது மனைவியுடன் இலங்கைக்கு வருகைதந்த அவர், நேற்று முன்தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

விமானத்தில் பயணமாகிக்கொண்டிருந்தபோது அவர் விமான கழிப்பறைக்கு சென்று வெகு நேரமாகத் திரும்பி வரவில்லை என்று கூறப்பட்டுள்ளதுடன் பின்னர் விமான ஊழியர்கள் கழிப்பறையை திறப்பதற்கு முயற்சித்த போதிலும், அது தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்பட்டது.

இதேவேளை பாரிய போராட்டத்தின் பின்னரே அவரது உடலம் விமானக் கழிப்பறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*