;
Athirady Tamil News

யானையால் பலியா? மரணத்தில் சந்தேகம்…!!

0

யானைத் தாக்கதலுக்கு இலக்காகி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் அநுராதபுரம் – மரதன்கடவல மஹலகம ஆற்றுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மரதங்கடவல தம்பெலஸ்ஸாகம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான நபரொருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் நேற்று முன்தினம்(10) இரவு தாவர மருந்துகளை சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்ட இத்திலிருந்து யானை தந்தம் ஒன்றின் பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக இபலோகம காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*