;
Athirady Tamil News

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைப்பு..!! (படங்கள்)

0

வடக்கு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைப்பு

வடமாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலையம் முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா நிறைவேற்று பொறியியலாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் புதிய பாதசாரிகள் கடவை அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பாதசாரிகள் கடவை இல்லாமையால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமையும், விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*