;
Athirady Tamil News

வவுனியாவில் அதிகாரசபை சபை அலுவலகத்திற்கு மேல் வீழ்ந்த மரம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் காற்று, மழை காரணமாக வீதி அதிகாரசபை சபை அலுவலகத்திற்கு மேல் வீழ்ந்த மரம்

வவுனியாவில் பெய்த வந்த மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அலுவலக வளாகத்தின் அலுவலகக் கட்டடத்தில் பாரிய மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது.

இதனால் அலுவலகத்தின் கூரைப் பகுதி மற்றும் சுவர் என்பன பாதிப்படைந்துள்ளதுடன் கடமையில் இருந்த உத்தியோகத்தர் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − seven =

*