;
Athirady Tamil News

கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய பொலிஸாருக்கு மகளிர் தினத்தில் கெளரவிப்பு…!! (படங்கள்)

0

கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி பாதுகாப்பான பிரசவத்திற்கு உதவி புரிந்த இலங்கை பொலிஸ் துறையை சேர்ந்த ஒருவர் கௌரவிக்கப்பட்டுள்ளாா்.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த (08.03.2018) அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியைச் சேரந்த கர்ப்பிணித் தாயொருவர் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளை, அவா் பயணித்த முச்சக்கர வண்டி இயந்திரக்கோளாறு ஏற்பட்டு இடைநடுவில் நின்றிருந்தது.

இரவு வேளையென்பதால் பயணத்தை தொடரமுடியாது பரிதவித்து நின்றவர்களுக்கு அப்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த செனிவிரட்ண என்ற பொலிஸாா் உதவியிருந்தார்.

குறித்த கா்ப்பிணியை தனது வாகனத்தில் ஏற்றி யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க உதவியிருந்தார். வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே வாகனத்தில் குழந்தை பிறந்திருந்தது.

குறித்த நேரத்தில் இவரின் உதவி கிடைத்தமையால் தாயும் சேயும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். தற்போது பொலநறுவ பகுதியில் கடமையாற்றிவரும் குறித்த பொலிஸாரின் மனிதநேய செயற்பாட்டை மதிப்பளிக்கும் வகையில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த பொலிஸாா் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த (08.03.2018) அன்று கண்டி வீதி, கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவின் போது இவரது மனிதநேய செயற்பாட்டை கௌரவிக்கும் முகமாக வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன் பொன்னாடை அணிவிக்க, வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*