;
Athirady Tamil News

எட்டு வயது மாணவருக்கு காட்டு யானையால் ஏற்பட்ட பரிதாப நிலை…!!

0

இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் நிகபொத்த பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எட்டு வயது மாணவரே பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் கொஸ்லாந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நிகபொத்த மகா வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்விகற்கும் குறித்த மாணவர், தனது அம்மா மற்றும் சகோதரி ஆகியோருடன் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது வீதியை இடைமறித்த காட்டு யானை ஒன்றே குறித்த மகிழுந்தைத் தாக்கியுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மகிழுந்தில் பயணித்த தாய் மற்றும் சகோதரி ஆகியோருக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*